சனி, 28 மே, 2011

முதல்வராக மமதா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவு கட்டித் தம் நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் பதினொன்றாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் செல்வி மமதா பானர்ஜி. கிழக்கு வங்கத்தில் ஷேக்ஹஸீனா, காலிதா ஜியா ஆகியோர் பிரதமர்களாக ஆட்சிக்கு வந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் மமதா பெற்றுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மமதா பானர்ஜி வரலாற்றில் ஹானர்ஸ் பட்டமும் இஸ்லாமிய வரலாற்றில் முதுகலை (எம் ஏ.) பட்டமும் பெற்றவர். மேலும் கல்வியியல் பட்டமும் சட்டப் படிப்பில் பட்டமும் (LlB)பெற்ற மமதா பானர்ஜி கல்லூரி மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தம் திறமையாலும் நெருப்புப் பொறி பறக்கும் பேச்சு வன்மையாலும் குறுகிய காலத்திலேயே - பத்தாண்டுகளுக்குள் - கட்சியில் மேனிலைக்கு உயர்ந்தார். மேற்குவங்க மாநிலத்தின் 'மகிளா காங்கிரஸ்' பொதுச் செயலாளரானார்.. 

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011052816901/mamata-banerjee-as-cm

சனி, 21 மே, 2011

ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம்!

எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, “ஆறு மாதங்கள் வாளா இருப்போம்; அதன் பிறகு வாளாக இருப்போம்." எனப் பொறுப்பான எதிர்க்கட்சித்  தலைவராகக் கருணாநிதி கூறினார். ஜெயலலிதா இரு முறை முதல்வராக இருந்து ஊழல்களும் அதிகார அத்துமீறல்களும் புரிந்து, மக்களால் தண்டிக்கப்பட்டுப் பதவியிழந்து அனுபவப்பட்டவர் என்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தேவையில்லை. உடனடியாக விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்.

இப்போதைய தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று வென்றவுடன், அரசின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அரசைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும் ஜெயலலிதா சொன்னார். புதிதாகப் பதவியேற்கும் எந்த அரசும் பழைய அரசின் மீது வைக்கும் முதல் குற்றச்சாட்டுகளுள் ஒன்று இதுவாகத்தான் இருக்கும். ஜெயலலிதா கூறியதில் உண்மை இல்லாமலுமில்லை. தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009 -- 2010 ம் ஆண்டு இறுதியில் 89,149 கோடி ரூபாயாக  இருக்கின்றன. கடந்த ஆட்சியின் போது தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் இலவச / நலத்திட்டங்கள் மட்டுமின்றி, ஜெயலலிதா தம் தேர்தல் அறிக்கையில் வாக்களித்திருந்த இலவசங்களான அம்மி  முதல் ஆட்டுக்குட்டிவரை மக்களுக்கு வழங்கவும் நிதி வேண்டும். இதை எப்படி ஈடுகட்டப் போகிறது புதிய அரசு என்ற வினா எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

முழுமையாக வாசிக்க.. http://www.inneram.com/2011052116699/jeyas-starting

சனி, 14 மே, 2011

முதலமைச்சராக ஜெயலலிதா!

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அல்லது எதிர்கட்சிக்கு ஆதரவான வெளிப்படையான அலை ஏதும் இல்லா நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜெயலலிதாவுக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் வாழ்த்துகள். 

தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்றும் அலசல் பகுதியில் எழுதியிருந்தோம். கருணாநிதி அரசு மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களும் இலவசங்களும் மக்களின் ஆதரவைத் தரும் என்றும் கருணாநிதி அமைத்த கூட்டணி வலிமையானது என்றும் கருதியதன் அடிப்படையிலும் வெளிப்படையான அலைகள் ஏதும் இல்லை என்பதாலும் அவ்வாறு எழுதியிருந்தோம். உலகெங்கும் வாழும் தமிழர்களோடு உறவுள்ள இந்நேரம் தளம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லா நிலையிலும் எனக்கு எழுத்துச் சுதந்திரம்  தந்து அலசலை எழுத அனுமதித்துள்ளது. கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்து அவரின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி எழுதிய அலசல்களையும் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று எழுதிய அலசலையும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து எழுதிய அலசலையும்  இந்நேரம் தளம் வெளியிட்டுள்ளது. ரஸ்ஸல் எக்கட்சிக்கும் ஆதரவாளனல்லன்.மக்களுக்கு மட்டுமே ஆதரவாளன். தமிழக மக்கள்  நடத்தியுள்ள மவுனப்புரட்சிக்கு மதிப்பளிக்கிறேன்.  

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011051416524/jayalalitha-as-cm

சனி, 7 மே, 2011

அடுத்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இம்மாதம் பதின்மூன்றாம் தேதி வெளிவர இருக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தி மு க கூட்டணி அதிக இடங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன.

கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை எனக் கருணாநிதி கூறினாலும் தாம் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளதை அவர் மறைக்கவில்லை. செம்மொழி மாநாடு, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய தமது மூன்று ஆசைகளை அல்லது நோக்கங்களை நிறைவேற்றிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கடந்த ஆண்டு அருந்ததியர் நடத்திய பாராட்டு விழாவில் கருணாநிதி அறிவித்திருந்தார். அதற்கேற்பத் தம் வாரிசாக மு க ஸ்டாலினைத் துணைமுதல்வராகவும் ஆக்கினார். ஆனால், அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளுக்கு அற்பாயுள்தானே! நடந்து முடிந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதோடு ஆறாவது முறையும் தம்மைத் தமிழக முதல்வராக்கும்படி வேண்டினார்.  

முழுமையாக வாசிக்க... http://www.inneram.com/2011050716285/stalin-next-chief-minister