ஞாயிறு, 10 ஜூலை, 2011

"ஆவீன மழை பொழிய......."

சன் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸாக்ஸேனா கைது செய்யப்பட்டதை அந்த டிவியின் செய்திகளில் மிகப்பெரும் அநீதியாகவும் பழிவாங்கும் நடவடிக்கையாகவும் சித்திரிப்பது நகைப்பை வரவழைக்கின்றது. ஸாக்ஸேனா மீது 420(மோசடி), 406(கையாடல்), 385(மிரட்டல்), 506(2)(கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டு நடப்பை உற்று நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது அநீதியாகவோ பழிவாங்கும் நடவடிக்கையாகவோ தெரியாது.

முழுமையாக வாசிக்க... http://www.inneram.com/2011071017768/karunanidhi-maran-brothers-and-sun-tv

சனி, 2 ஜூலை, 2011

காங்கிரஸுடன் கூட்டணிக்கு அஇஅதிமுக !


தமிழகச் சட்டமன்றத் தேர்தலில்  திமுக - காங்கிரஸ் கூட்டணி  படுதோல்வி அடைந்ததையடுத்து   'உன்னாலே நான் தோற்றேன்' என்ற கூச்சல் இரு கூடாரங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது."கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற கருணாநிதியின் 'பிறந்தநாள் செய்தி' இதற்கு உரமூட்டி இரு தரப்பிலும் உரசல்களை உருவாக்கியது.2 ஜி வழங்கியதில்  லஞ்சம் பெற்ற வழக்கில் திகார் சிறையில் வாடும் மகள்  கனிமொழியைச் சந்திப்பதற்காக இரண்டாம் முறை டெல்லி சென்ற கருணாநிதியைக் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் தமிழக  உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என இளைஞர் காங்கிரசார் குரல் எழுப்பி வருகின்றனர். 

சனி, 25 ஜூன், 2011

ஜெயலலிதாவின் கமிஷன்


ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம் என்ற தலைப்பிலான அலசலில் "கருணாநிதி கட்டினார் என்பதற்காகப் புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதாவே, "வசதிக் குறைவானது" என அறிவித்த கோட்டைக்கு மீண்டும் மாற்றுவது, ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

அதே இறுமாப்பு.......அதே பிடிவாதம்..... அதே ஊதாரித்தனம்........ கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்திற்காகவே மக்களின் சுமார் 910 கோடி வரிப்பணத்தை உதாசீனம் செய்து, கோட்டைத் தலைமைச் செயலகத்துக்காக  மக்கள் வரிப்பணத்தை மேலும் வாரியிறைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்........" என்றும்  "அடுத்து, தலைமைச் செயலகம் கட்டியதில் மாபெரும் ஊழல், நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில் கருணாநிதியும் சில அமைச்சர்களும் கைது செய்யப் படலாம். அதற்கு வசதியாக, ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில் கருணாநிதியை ‘விடியும் முன் கைது’—pre dawn arrest -- செய்ததால் நாகர்கோவில் போக்குவரத்துக் கழகக் கண்காணிப்புப் பிரிவிற்குக் கருணாநிதியால் கடாசப் பட்ட ஜார்ஜை, சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி ஆக மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா…." என்றும் குறிப்பிட்டிருந்தேன் .. என் எதிர்பார்ப்பை ஜெயலலிதா வீணாக்கவில்லை. இப்போது  "புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் உள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது"....என வந்துள்ள செய்தி இதை மெய்ப்பிக்கிறது.

சனி, 11 ஜூன், 2011

கனிமொழி கைதும் கருணாநிதி புலம்பலும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமத்தை ஸ்வான் நிறுவனத்திற்கு முறைகேடாக விற்றதற்குப் பரிசாக லஞ்சப் பணம் ரூபாய் 214 கோடி, கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டதற்கு, ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கனிமொழியும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கனிமொழியின் சிறையிருப்பு, ஒரு தந்தை என்ற நிலையில் கருணாநிதிக்குத் துயரத்தை அளித்திருக்கிறது. தாம் பிறந்தநாளில் குடும்பத்தினர் அனைவரும் தமக்கு வாழ்த்துச் சொல்ல வரிசையாக நின்ற வேளையில், பாசமகள் கனிமொழி தம்மோடு இல்லையே என்ற வருத்ததுடன் இருந்த கருணாநிதி, கடந்த வாரம் (05/06/2011) திருவாரூரில் நடந்த திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், கனிமொழி சிறையில் வாடுவது பற்றிச் சொல்லிக் கண்ணீர் விட்டுள்ளார். "திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி" என்று கூறினார்.

முழுமையாக வாசிக்க... : http://www.inneram.com/2011061117163/kanimozhis-arrest-and-karunanidhis-reactions

சனி, 4 ஜூன், 2011

தயாநிதி - 2ஜி - தோண்டத் தோண்ட பூதம்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார். தினகரன் நாளிதழில்,"வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின. அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆண்டிமுத்து ராசா வந்தார்.

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011060417016/dayanidhi-2-g

சனி, 28 மே, 2011

முதல்வராக மமதா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தின் 34 ஆண்டு கால இடதுசாரி ஆட்சிக்கு முடிவு கட்டித் தம் நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் பதினொன்றாவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் செல்வி மமதா பானர்ஜி. கிழக்கு வங்கத்தில் ஷேக்ஹஸீனா, காலிதா ஜியா ஆகியோர் பிரதமர்களாக ஆட்சிக்கு வந்த நிலையில் மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் மமதா பெற்றுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மமதா பானர்ஜி வரலாற்றில் ஹானர்ஸ் பட்டமும் இஸ்லாமிய வரலாற்றில் முதுகலை (எம் ஏ.) பட்டமும் பெற்றவர். மேலும் கல்வியியல் பட்டமும் சட்டப் படிப்பில் பட்டமும் (LlB)பெற்ற மமதா பானர்ஜி கல்லூரி மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தம் திறமையாலும் நெருப்புப் பொறி பறக்கும் பேச்சு வன்மையாலும் குறுகிய காலத்திலேயே - பத்தாண்டுகளுக்குள் - கட்சியில் மேனிலைக்கு உயர்ந்தார். மேற்குவங்க மாநிலத்தின் 'மகிளா காங்கிரஸ்' பொதுச் செயலாளரானார்.. 

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011052816901/mamata-banerjee-as-cm

சனி, 21 மே, 2011

ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம்!

எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, “ஆறு மாதங்கள் வாளா இருப்போம்; அதன் பிறகு வாளாக இருப்போம்." எனப் பொறுப்பான எதிர்க்கட்சித்  தலைவராகக் கருணாநிதி கூறினார். ஜெயலலிதா இரு முறை முதல்வராக இருந்து ஊழல்களும் அதிகார அத்துமீறல்களும் புரிந்து, மக்களால் தண்டிக்கப்பட்டுப் பதவியிழந்து அனுபவப்பட்டவர் என்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தேவையில்லை. உடனடியாக விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்.

இப்போதைய தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று வென்றவுடன், அரசின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அரசைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும் ஜெயலலிதா சொன்னார். புதிதாகப் பதவியேற்கும் எந்த அரசும் பழைய அரசின் மீது வைக்கும் முதல் குற்றச்சாட்டுகளுள் ஒன்று இதுவாகத்தான் இருக்கும். ஜெயலலிதா கூறியதில் உண்மை இல்லாமலுமில்லை. தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009 -- 2010 ம் ஆண்டு இறுதியில் 89,149 கோடி ரூபாயாக  இருக்கின்றன. கடந்த ஆட்சியின் போது தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் இலவச / நலத்திட்டங்கள் மட்டுமின்றி, ஜெயலலிதா தம் தேர்தல் அறிக்கையில் வாக்களித்திருந்த இலவசங்களான அம்மி  முதல் ஆட்டுக்குட்டிவரை மக்களுக்கு வழங்கவும் நிதி வேண்டும். இதை எப்படி ஈடுகட்டப் போகிறது புதிய அரசு என்ற வினா எல்லோர் மனங்களிலும் எழுகிறது.

முழுமையாக வாசிக்க.. http://www.inneram.com/2011052116699/jeyas-starting

சனி, 14 மே, 2011

முதலமைச்சராக ஜெயலலிதா!

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அல்லது எதிர்கட்சிக்கு ஆதரவான வெளிப்படையான அலை ஏதும் இல்லா நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜெயலலிதாவுக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் வாழ்த்துகள். 

தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்றும் அலசல் பகுதியில் எழுதியிருந்தோம். கருணாநிதி அரசு மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களும் இலவசங்களும் மக்களின் ஆதரவைத் தரும் என்றும் கருணாநிதி அமைத்த கூட்டணி வலிமையானது என்றும் கருதியதன் அடிப்படையிலும் வெளிப்படையான அலைகள் ஏதும் இல்லை என்பதாலும் அவ்வாறு எழுதியிருந்தோம். உலகெங்கும் வாழும் தமிழர்களோடு உறவுள்ள இந்நேரம் தளம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லா நிலையிலும் எனக்கு எழுத்துச் சுதந்திரம்  தந்து அலசலை எழுத அனுமதித்துள்ளது. கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்து அவரின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி எழுதிய அலசல்களையும் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று எழுதிய அலசலையும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து எழுதிய அலசலையும்  இந்நேரம் தளம் வெளியிட்டுள்ளது. ரஸ்ஸல் எக்கட்சிக்கும் ஆதரவாளனல்லன்.மக்களுக்கு மட்டுமே ஆதரவாளன். தமிழக மக்கள்  நடத்தியுள்ள மவுனப்புரட்சிக்கு மதிப்பளிக்கிறேன்.  

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011051416524/jayalalitha-as-cm

சனி, 7 மே, 2011

அடுத்த முதல்வர் ஸ்டாலின்!

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இம்மாதம் பதின்மூன்றாம் தேதி வெளிவர இருக்கின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தி மு க கூட்டணி அதிக இடங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றன.

கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை எனக் கருணாநிதி கூறினாலும் தாம் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளதை அவர் மறைக்கவில்லை. செம்மொழி மாநாடு, புதிய சட்டமன்றக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய தமது மூன்று ஆசைகளை அல்லது நோக்கங்களை நிறைவேற்றிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கடந்த ஆண்டு அருந்ததியர் நடத்திய பாராட்டு விழாவில் கருணாநிதி அறிவித்திருந்தார். அதற்கேற்பத் தம் வாரிசாக மு க ஸ்டாலினைத் துணைமுதல்வராகவும் ஆக்கினார். ஆனால், அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளுக்கு அற்பாயுள்தானே! நடந்து முடிந்த தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதோடு ஆறாவது முறையும் தம்மைத் தமிழக முதல்வராக்கும்படி வேண்டினார்.  

முழுமையாக வாசிக்க... http://www.inneram.com/2011050716285/stalin-next-chief-minister

சனி, 30 ஏப்ரல், 2011

ஒளிந்துகொண்டிருக்கும் அரக்கன்!

அணுசக்தியைப் பயன்படுத்தினால்தான் ஒரு நாடு வளர்ச்சி பெற்ற நாடாக அல்லது வல்லரசாகத் திகழ முடியும் என்ற எண்ணத்தினாலேயே பல நாடுகளும் அணு ஆற்றலைப் பயன்படுத்துகின்றன. அண்மைக் காலத்தில் ஈரான் நாடு, தன் மின் தேவைக்காக அணு மின் நிலையம் ஒன்றை நிறுவி உலைகளை இயக்க முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் அதை அமெரிக்கா எதிர்க்கிறது. ஈரான் அணு ஆற்றலைப் பெற்றுவிடக் கூடாது என ஐ நா மூலம் ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவு நாடான ஐக்கிய அரபு அமீரகங்கள் நாடு தனது மின் தேவைக்காக அணு மின் நிலையம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில்  மின்சார உற்பத்திக்காகப் புனல் மின் நிலையம், அனல் மின் நிலையம் போன்றவை செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுகட்ட அணுமின் நிலையங்கள் அமைக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதற்கெனத் துவங்கப் பட்டதுதான் இந்திய அணுமின் கழகம்(Nuclear Power Corporation of India Ltd -- N P C I L). அக்கழகத்தின் கீழ்   தாராப்பூர் Tarapur, (மகாராஷ்டிரம்), ராவட்பட்டா Rawatbhata, (ராஜஸ்தான்), நரோரா Narora, (உத்தரப் பிரதேசம்), கக்ரபார் Kakrapar (குஜராத்), கல்பாக்கம் Kalpakkam (தமிழ் நாடு), கைகா Kaiga, (கர்நாடகா) போன்ற இடங்களில்  அணு மின் நிலையங்கள் உள்ளன. கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்படத் துவங்கும். அந்த வரிசையில்தான் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஜெய்தாபூரில் 9,900 மெகாவாட் திறன் கொண்ட அணு மின் நிலையம் அமைய உள்ளது. ஜெய்தாப்பூரில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தைப் சிவசேனா முன் நின்று நடத்துகிறது. அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்ள அணுமின் உலையே தீர்வு என அரசு சொல்கிறது. 

முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011043016068/hidden-demon

சனி, 23 ஏப்ரல், 2011

ஆட்சிகளைக் கவிழ்த்த நொய்ம்மை நிகழ்வுகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியாயினும் ராணுவத் தலைமையில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சியாயினும் மன்னர் ஆட்சியாயினும் அவை கவிழ்க்கப் படுவதற்கு,  ரகசியமாகச் சதித்திட்டங்கள் தீட்டி, தலைமறைவு இயக்கங்கள் நடத்தி, ரத்தம் சிந்திப் போராடி, சபை உறுப்பினர்களைக் கடத்தி அல்லது விலைக்கு வாங்கி ஆட்சிகளைக் கவிழ்த்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். சமகாலத்தில்  சில ஆட்சிகள் சில நொய்ம்மை நிகழ்வுகள் காரணமாகக் கவிழ்ந்திருப்பது அல்லது கவிழ்க்கப்பட்டிருப்பது வரலாற்றின் விசித்திரமே!

மிக அண்மைக் காலத்தில் வட ஆப்பிரிக்க  அரபு நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் போராட்டங்களும்  நிகழ்ந்து வருகின்றன.  துனீஸியாவைத்  தொடர்ந்து எகிப்திலும் ஆட்சி மாற்றம் நடந்தது; லிபியாவில் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் மருந்துக் கிடங்கு ஒரு சிறு பொறிக்காகக் காத்திருந்ததைப்போல ஒரு சிறு நிகழ்வு இத்தனைக்கும் தொடக்கமாக அமைந்துவிட்டது. ஆம்! நடைபாதையில் காய்கறி, பழங்கள் விற்கும் முகமது பு அஸீஸீ என்ற ஒரு பட்டதாரி வாலிபனை, முனிசிப்பாலிட்டியில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் ஃபைதாஹாமிதி எனும் பெண் கன்னத்தில் அறைந்த ஒரு நொய்ம்மை நிகழ்வு  இரண்டு ஆட்சிகளைக் காவு கொண்டு மூன்றாவதற்கு முயன்று கொண்டிருக்கிறது.

முழுமையாக வாசிக்க : http://www.inneram.com/2011042315825/events

சனி, 16 ஏப்ரல், 2011

கிஸ்ஸா குர்ஸீகா!

மன்னராட்சியாயினும் மக்களாட்சியாயினும் சர்வாதிகார ஆட்சியாயினும் -- ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர --ஆள்வோருக்கு மக்கள் சேவை என்பதை விட அதிகாரம் என்பது போதையாகவும் செல்வம் சேர்க்கும் வழியாகவும் இருந்திருக்கிறது என்பதே வரலாறு காட்டும் உண்மை.

சேர சோழ பாண்டிய பல்லவர்களும் களப்பிரர்களும் நாயக்கர்களும் நவாபுகளும் மராட்டியர்களும்  மவுரியர்களும் குப்தர்களும் மகதர்களும் மங்கோலியர்களும் நாடுபிடிக்கத் துடித்ததும் அலெக்ஸாண்டர் பல நாடுகளை வென்றதும் மக்கள் சேவைக்காகவா? கஜினிமுகமதுவும் கோரிமுகமதுவும் இந்தியாவுக்குப் படையெடுத்தது இந்திய மக்களைக் கடைத்தேற்றவா?  அல்லது ஆங்கிலேயர்களும் ஐரோப்பியர்களும்  இந்தியாவைப் பங்கு வைத்து ஆண்டது பொதுநலத்தாலா?  

சனி, 9 ஏப்ரல், 2011

அரசியல் நாகரீகம்!

இரு மாதங்களுக்கு முன் பொதுவுடைமைப் போராளி ஜீவாவின் பேத்தியின் மண விழாவில் வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, "இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக்கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது" என்று பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் இழிவாகப் பேசியதாக ஜெயலலிதாவுக்கும்  விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் வேண்டி நோட்டீஸ் கொடுத்துள்ளது.

***************
பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் இடையே நடந்த போரில், துரோணர் கெளரவர் பக்கம் நின்று கடும்போர் புரிந்தார்.  பதினைந்தாம் நாள் போரில் துரோணர் பாண்டவர் படைகளைச் சிதறடித்துக் கொண்டிருந்தார். பிரம்மாஸ்திரத்தை எய்யத் துணிந்த அவரைத் தடுத்து நிறுத்தாவிடின் பாண்டவர் படைக்குப்  பேரிழப்பு ஏற்படும் என்று உணர்ந்த கண்ணன் பீமனை அழைத்து, "துரியோதனனின் யானையான அஸ்வத்தாமன் நம் படைகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதால் அதைக் கொன்று விடு" என்றான். பெரும் பலசாலியான பீமன் தன் கதாயுதத்தால் யானை அஸ்வத்தாமனைக் கொன்றான். வெற்றி ஒன்றே குறிக்கோளாகி விட்ட போரில் வெற்றி பெறுவதற்கு எவ்விதச் செயலையும் செய்யலாம் எனத் தீர்மானித்த கண்ணன், துரோணரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதால், "அஸ்வத்தாமனைக் கொன்று விட்டேன்" எனத் துரோணரின் காதுபடப் பீமனைக் கூச்சலிடச் செய்தான். யாராலும் வெல்ல முடியாத தம் மகன் அஸ்வத்தாமனைப் பீமன் கொன்றிருப்பான் என துரோணர் நம்பி விட்டார்.

முழுமையாக வாசிக்க : http://www.inneram.com/2011040915370/political-culture

சனி, 2 ஏப்ரல், 2011

'கை' நழுவும் வெற்றி?

கடந்த இரு வாரங்களுக்கு முன் எழுதியிருந்த அலசலில், தி மு க கூட்டணியில் காங்கிரஸால் உருவான சிக்கல்களையும்  அக்கட்சியின் கோஷ்டிப் பூசல்களால் ஒருவருக்கொருவர் காலை வாரும் வாய்ப்பு உள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில், வேட்பாளர் தேர்விலும் வேட்பு மனு அளிப்பதிலும் அக்கட்சியின் கோஷ்டிப்பூசல் இத்தேர்தலிலும் தெள்ளத் தெளிவானது. கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்து கையெழுத்திட, அறிவாலயத்துக்குக் கட்சியின் ஐவர்குழுவை அழைக்காமலே சென்றார் தங்கபாலு. டெல்லியில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் தேர்வில் G K வாசனின் கைதான் ஓங்கி இருக்கிறதாம். அவரது கோஷ்டி ஆட்கள்தாம் அதிகமாம். சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், பிரபு என காங்கிரஸுக்குள் இருக்கும் குட்டிக் கட்சிகள் தம் வேட்பாளார்களைக் களமிறக்கியுள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹஸீனா ஸையத் மற்றும் மக்பூல்ஜான் குழப்பமும் மயிலாப்பூரில் ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் அதைத் தொடர்ந்து மகிளாகாங்கிரஸார் தீக்குளிக்க முயன்றதும் கட்சி அலுவலகம் கட்சித் தொண்டர்களாலேயே சூறையாடப்பட்டதும் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பரபரப்பான அல்லது நகைச்சுவையான அல்லது வெறுப்பூட்டிய செய்திகளாயின. 

முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011040215140/loosing-victory-from-hand

சனி, 26 மார்ச், 2011

வைகோவின் அரசியல் -- சில நினைவுகள்

தமிழ்நாட்டு  அரசியலில் வியப்புக்குறியாய் வளர்ந்து இன்று வினாக்குறியாய் நிற்கும் வைகோ எனத் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் வையாபுரி கோபாலசாமி,முப்பத்தைந்து / நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழக இளைஞர்களால் ஆராதிக்கப்பட்டவர். திமுகவில் எம்ஜிஆர், கருணாநிதிக்கடுத்து  கோபாலசாமியின் கூட்டத்துக்குத்தான் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வருவர். எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின், 'கலைஞரின் போர்வாள்' எனப் புகழப்பட்டவர் கோபாலசாமி.  அவரின் எழுச்சி மிகு உரைகளும் அண்ணாவைப் பின்பற்றி அவர் மேற்கோளிட்டுக் காட்டும் உலக வரலாறுகளும்  இளைஞர்களை அவர்பால் ஈர்த்தன. இதை முறையாகப் பயன்படுத்த திமுக மாணவர் அணியின் இணைச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். மாணவர் அணிச் செயலாளராக எல்ஜி என அழைக்கப்பட்ட எல்.கணேசனும் இணைச் செயலாளர்களுள் ஒருவராக செஞ்சி ராமச்சந்திரனும் இருந்த போதிலும் - எல்ஜி, விஜி, செஞ்சி என அப்போது அழைக்கப்பட்ட மூவரிலும் கோபாலசாமிக்குத்தான் இளைஞர்களிடம் செல்வாக்கு.

முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011032614903/vaikos-politics

சனி, 19 மார்ச், 2011

சேரிடம் அறிந்து சேர்

சேரிடம் அறிந்து சேர் - அலசல் By ரஸ்ஸல்!அடுத்த ஆட்சி .. தி மு க வுக்கு எட்டாக்கனியா? எனத் தலைப்பிட்டுக் கடந்த 05/03/2011 ஆம் தேதி எழுதியிருந்த அலசலில், //தற்போது அ இ அ தி மு க அணியில் விஜயகாந்த் இருப்பதால் முன்னர் அவருக்கிருந்த பொதுமக்கள் ஆதரவு இப்போதும் கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியது..... விஜயகாந்த் அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் மற்றொரு வைகோ ஆக மாறும் வாய்ப்பே அதிகம் என எழுதியிருந்தேன். மேலும் வைகோ, 'வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதை'யாக ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார்... ஜெயலலிதா "பார்த்துப் போட்டுக் கொடுக்கும்" சீட்டுக்களுக்காகக் காத்திருக்கிறார்... விஜயகாந்த் நாளை மற்றொரு வைகோ ஆகும் முன் விழித்துக் கொள்ள வேண்டும்// என்றும் அறிவுரை கூறியிருந்தேன்.

இரண்டு நாட்களாக ஊடகங்களில்  வெளியான செய்திகள் என் கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2006 ஆம் ஆண்டுத் தேர்தலில் கருணாநிதி வழங்கிய இடங்களுக்கும் மேல் ஓரிடம் கேட்டுப் பிணங்கி வெளியேறி, ஈழத்துக்கும் ஈழத்தமிழருக்கும் எதிரான ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்த வைகோ, அன்று முதல் இன்று வரை தம் கர்ஜனையை இருமலாக மட்டுமே வெளிப்படுத்தி, ஜெயலலிதாவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். -- புரட்சித் தலைவியின் முன் புரட்சிப் புயல் பலவீனமடைந்து தாலாட்டும் தென்றலாக மாறியது.


முழுமையாக வாசிக்க : சேரிடம் அறிந்து சேர் 

சனி, 12 மார்ச், 2011

தி மு க ஆட்சி... கனவு பலிக்க!

"கடந்த வார அலசலில் தி மு க கூட்டணிக்குள் காங்கிரஸ் கலகம் செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும்; இல்லையெனில் தி மு கவுக்கு அடுத்த ஆட்சி எட்டாக்கனியாகி விடும் என்று எழுதியிருந்தோம். காங்கிரஸ் அறுபது இடங்களுக்கு ஒப்புக்கொண்டு முடிவுக்கு வருவார்கள் என்றிருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் இருந்து வந்திருந்த குலாம்நபி ஆசாத் சொல்லிக் கொள்ளாமல் டெல்லிக்குச் சென்று அங்கிருந்து அறுபத்துமூன்று இடங்கள் வேண்டும் என இக்கட்டைத் தோற்றுவிக்கவே, கடுப்பான கருணாநிதி, "காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்டு நெருக்கடி தருவதால் மத்திய அரசிலிருந்து ஆறு தி மு க அமைச்சர்களும் விலகுவார்கள்" என அறிவித்தார்.

இதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், தமிழர் அமைப்பைச் சேர்ந்த சுப வீரபாண்டியன் ஆகியோர் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன், தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக மகிழ்ந்தார். பல ஊர்களில் காங்கிரஸ் மற்றும் தி மு க வினர் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்ததாகவும் செய்திகள் வந்தன.

முழுமையாக வாசிக்க : தி மு க ஆட்சி... கனவு பலிக்க!

சனி, 5 மார்ச், 2011

"நாளுக்கு நாள் மாறி வரும் அரசியல் நிலைமாற்றம், எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தி மு க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்ற வினாவைப் பல மட்டத்திலும் எழுப்பியுள்ளது. தி மு க, காங்கிரஸ், பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி, எதிரணியை விட  வலிமையானதாகக் கருதப்பட்டது.
ஓய்விலிருந்து இன்னும்  முழுமையாக வெளிவராத ஜெயலலிதாவின் கூட்டணியில் அ இ அ தி மு க வைத் தவிர, பெரும் ஓட்டு வங்கி உள்ள  பெரிய கட்சி எதுவும் இல்லை. தே மு தி க வை நடிகர் விஜயகாந்த் துவக்கியபோது இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று என்ற நம்பிக்கையில் தே மு தி க -வுக்குப் பொதுமக்கள் அளித்த வாக்குகளே இப்போது அவரையும் கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதாவை நிர்பந்தித்தன என்ற உண்மையை இருவருமே உணரவில்லை. தற்போது அ இ அ தி மு க அணியில் விஜயகாந்த் இருப்பதால் முன்னர் அவருக்கிருந்த பொதுமக்கள் ஆதரவு இப்போதும் கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியது. விஜயகாந்த் அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் மற்றொரு வைகோ ஆக மாறும் வாய்ப்பே அதிகம்.

சனி, 26 பிப்ரவரி, 2011

பொய்க்குற்றசாட்டும் போலீஸ் முறையும் -2

"நாட்டில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் நடந்துவிட்ட குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதற்கும் காவல்துறைக்குக் கோடிக்கணக்கில் செலவுகள் செய்கின்றன அரசுகள். விரைந்து செல்ல வாகனங்களையும் புலனாய்வுக்கு உதவுவதற்காக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகளையும்  அரசுகள் காவல்துறைக்கு அளிக்கின்றன. இருந்தபோதிலும்  குற்ற வழக்குகளில், அதுவும் கொலை போன்ற கொடிய குற்ற வழக்குகளில் விரிவான ஆழமான, அறிவியல் ரீதியிலான  புலனாய்வுக்கு மெனக்கிடாமல், கையில் கிடைத்த அப்பாவிகளைக் குற்றவாளியாக்குவதில் போலீஸ் எவ்விதத் தயக்கமும் காட்டுவதில்லை என்பதையே முன் சொன்ன வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு சடலம் கிடைத்தது என்றால் மரண காரணம் இயற்கை மரணமா  கொலையா தற்கொலையா விபத்தா என முதலில் ஆராய்வர். பின் இறந்தவரை அடையாளம் காண முயல்வர். இறந்தவர் யார் என ஊகித்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள மரபணு சோதனை போன்ற எத்தனையோ நவீன அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றன.

சனி, 19 பிப்ரவரி, 2011

பொய்க்குற்றசாட்டும் போலீஸ் முறையும்

"நாட்டில் பல திருட்டு, களவு, கொள்ளை போன்ற சம்பவங்களில் பணம், நகைகள், எலெக்ட்ரானிக்  பொருட்கள், கார், பைக் போன்றவை திருடப்படுகின்றன. அவற்றைத் திருடியவர்களைக் கண்டுபிடித்துப் பொருட்களை மீட்டு உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்ததாக எப்போதாவது புகைப்படத்தில் போஸ் கொடுத்தபடி நிற்கும்  போலீஸார் அளித்த செய்தி நாளிதழ்களில் வரும். இதில் உண்மையான திருடர்கள் பிடிபட்டார்களா, பொருட்கள் அத்திருடர்களிடமிருந்துதாம் மீட்கப்பட்டனவா என்பனவற்றை யாரும் துருவுவதில்லை. ஒரு செய்தியாகப் படித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவி விடுவோம்.


ஆனால் பொதுவாக, நகை திருட்டில் நகைகளை எப்படித் திரும்பப் பெறுகிறார்கள் என்பதைப் பல வழக்குகளில் நான் கண்டும் கேட்டும் பத்திரிகைகளில் படித்தும் அறிந்துள்ளேன்.

ஏதாவது ஒரு திருட்டு வழக்கில் சிக்கும் ஒருவன் மீது, அந்தக் காவல்நிலையத்தில் நிலுவையில் இருக்கும் நகைத் திருட்டு வழக்குகளைச் சுமத்தி மொத்தம் எத்தனை பவுன் நகை தேவை எனக் கணக்கிட்டுக் கொள்வர். பிறகு அவனை நகரில் இருக்கும் நகைக் கடைகளுக்குக் கூட்டிச் சென்று இங்குதான் இத்தனை கிராம் மதிப்புள்ள நகையைக் கொடுத்தேன் என அவனைக் கூறச்செய்வர். கடையின் வியாபாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம், வழக்கு, வாய்தா என அலைச்சல், மன உளைச்சல் ஆகியவற்றுக்கு அஞ்சி கடைக்காரர் தம் கடையில் இருந்து ஏதோ ஒரு நகையைக் கொடுத்துத் தலையை உருவிக் கொள்வார். இப்படித் தேவைப் பட்டதற்கும் மேலேயே எடுத்துக் கொள்ளும் போலீஸ்.

சனி, 12 பிப்ரவரி, 2011

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் விசித்திரம்

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" எனப் பாரதி சொன்னதில் முற்பாதியைக் கண்டுகொள்ளாமல் பிற்பாதியை ஊக்குவித்ததால் இன்று விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். விதைகளுக்கும் பூச்சிமருந்துக்கும் உரத்துக்கும் விலையேற்றம், பாசனத்துக்கு நீர் வரத்து இல்லை, மின்வெட்டு, வறட்சி, புயல், மழைவெள்ளப் பெருக்கு, இவற்றைச் சமாளித்து அறுவடை செய்தால் விளைபொருளுக்கு ஏற்ற விலையில்லை எனப் பல்வேறு சங்கடங்களைச் சந்திக்கிறான் விவசாயி.

நாட்டின் முதுகெலும்பான பயிர்த் தொழில் செய்பவனை அந்நியச் செலாவணிக்காக அழியவிட்டுக் கொண்டிருப்பது என்ன நியாயம்?
பின்னலாடைத் தொழிலில் கடந்த முப்பது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்த திருப்பூர் இன்று ஆண்டுக்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் அளவு செழித்து, 'டாலர்சிட்டி' என அழைக்கப்படுகிறது. பின்னலாடைத் தொழிலில் வண்ண ஆடைகள் ஏற்றுமதி தொடங்கிய பிறகு, அதைச் சார்ந்த சாயப்பட்டறைகள் உருவாயின. துவக்கத்தில் இலகு வண்ணங்கள் ஏற்றப்பட்டு வந்த பின்னலாடைகள் காலப்போக்கில் பெரிதான விற்பனைத் தேவைக்கேற்ப அடர் வண்ணங்கள் ஏற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. அப்போதிருந்தே சாயக் கழிவுகளான இரசாயனங்களும் அமிலங்களும் உப்பும் சேர்ந்து ஆற்று நீரை மாசுபடுத்தி விஷமாக்கி விட்டன.

சனி, 5 பிப்ரவரி, 2011

இலங்கைக் கடற்படைக்கு இரையா தமிழக மீனவன்?

"கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை

உறவைக் கொடுத்தவர் அங்கே

அலை கடல் மேலே அலையாய் அலைந்து

உயிரைக் கொடுப்பவர் இங்கே" 

எனக் கவிஞர் வாலி படகோட்டித் திரைப்படத்தில் எழுதிய பாடல் இன்று தமிழக மீனவர்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது.
பண்டைய நாட்களில் மீனவர்களுக்குக் "கடலம்மா" கோபமுற்றால் மட்டுமே இழப்பு வரும். இயற்கைச் சீற்றத்தால் எழும் புயலும் மழையும் அலைகளின் ஆழித் தாண்டவமும் அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். இப்போது அதிநவீன எந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகள், திசைமாறிப் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் காவல் படகுகள், ஹெலிகாப்டர் தேடுதல்கள் என வசதிகள் பெருகி விட்டதால் உயிர் இழப்புகளைப் பற்றிய கவலை இன்றி நாட்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ஆனால் தமிழக மீனவனுக்கு மட்டும் இன்னல் தீரவில்லை.

ஆம் அவனது இன்னல் இலங்கைக் கடற்படை வடிவில் தொடர்கிறது.

முழுமையாக வாசிக்க : இலங்கைக் கடற்படைக்கு இரையா தமிழக மீனவன்?

சனி, 29 ஜனவரி, 2011

சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்

தேசபக்தியை மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் சங்பரிவார், அதை உலகுக்கு உணர்த்துவதற்காகக் காஷ்மீரில் குடியரசு நாளில் மூவண்ணக் கொடியேற்றுவதற்காகப் பல இடங்களிலும் இருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு சென்றது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆர் எஸ் எஸ் அபிமானிகள் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு -  'அது' இல்லை என வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.

காஷ்மீரிலுள்ள மசூதி ஒன்றின்மீது பலவந்தமாக கொடிகட்டும் பாஜக, விஹெச்பி தொண்டர்கள்"ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல" எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.

பீஜேபியின் காஷ்மீர் யாத்திரை மீண்டும் அதை நிரூபித்து விட்டது.

சனி, 22 ஜனவரி, 2011

தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

தேசபக்தி என்பது தங்களுக்கு மட்டுமே சொந்தமானது எனப் பம்மாத்துப் பண்ணிக்கொண்டிருப்பவை இந்துத்துவா பேசும் சங்பரிவார் அங்கங்கள்.  தேசம் என்பது வெறும் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பரப்போ தொழிற்சாலைகளோ விளை நிலங்களோ அல்ல; மாறாக மக்களும் அவர்களது நாகரீகமும் பண்பாடும் நிறைந்த விழுமியங்களே என நம் தளத்தின் முதல் அலசலில்  சொல்லியிருந்தேன். அந்த விழுமியங்களை விலைபேசிவிட்டு இன்னும் நாங்களே தேசபக்திக்குச் சொந்தக்காரர்கள்; இந்நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்ட்கள், நாத்திகர்கள் எல்லோரும் அந்நியநாட்டு விசுவாசிகள் எனச் சங்பரிவார் சொல்வது இனியும் செல்லுபடியாகாது.

ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல. இந்த மாபெரும் தேசத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக முகத்தின்மீது கரி பூசும் வேலையையே அவை செய்து வந்துள்ளன..
முழுமையாக வாசிக்க: தேசபக்த வேடம் கலைய வேண்டுமா?

சனி, 15 ஜனவரி, 2011

வானத்திலிருந்து குதித்ததா சி.பி.ஐ. - 2

ஆருஷி மற்றும் ஹேம்ராஜின் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் -- ஆனால் சந்தேகத்தின் நிழலை டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மீது  சாய்த்துவிட்டு -- வழக்கை மூட முனையும் சி.பி.ஐ.யிடம், 'வழக்கை மூட ஏன் இந்த அவசரம்' என வினவிய காஜியாபாத் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற மாஜிஸ்திரேட் ப்ரீதி சிங், இம்மாதம் (ஜனுவரி) 21 ஆம் தேதிவரை இதன் மீதான விசாரணையை ஒத்திவைத்து, வழக்கை மூடும் அறிக்கை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆருஷியின் பெற்றோருக்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி ஆருஷியின் நண்பர்களும் உறவினர்களும் மத்திய டில்லியின் ஜந்தர்மந்தர் முன் ஆருஷியின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுவிசாரணை கோரியுள்ளனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் Polygraph, Narco Analysis, Brain maping என விதம் விதமான உண்மை கண்டறியும் சோதனைகள்  நடத்தப்பட்ட பின்னரும் உண்மையான குற்றவாளி அல்லது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.ஐ. வழக்கைக் கை கழுவுகின்றது எனில், சி.பி.ஐ. என்ற மாயை தகர்கிறது என்றுதான் பொருள். இப்படித்தான் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கிலும் சி.பி.ஐ. கை கழுவ முனைந்தது.

கோட்டயத்தில் இருக்கும் 'பயஸ் 10 கான்வெண்'டில் தங்கியிருந்த, கோட்டயம் பி.சி.எம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ப்ரிடிகிரி வகுப்பு மாணவியான கன்னியாஸ்திரி அபயா, 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் திடீரெனக் காணமல் போனார். கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் "காணவில்லை" என வழக்குப் பதிவு செய்தனர். தேடுதலின்போது அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.வி. அகஸ்டின் முன்னிலையில் அந்தக் கான்வெண்டின் காம்பவுண்டுக்குள் இருக்கும் கிணற்றில் இருந்து, 19 வயதேயான அபயாவின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. கோட்டயம்  மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் பிணப்பரிசோதனை நடத்தினார். அபயாவின் மரணம் தற்கொலை என முடிவு செய்து அறிவிக்கபட்டது.

ஆனால் மார்ச் மாதம் 31ஆம் தேதி அமைக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டக்குழு, கேரள மாநில முதல்வர், இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி, காவல்துறைத் தலைவர் என அனவருக்கும் இவ்வழக்கைச் சரியான முறையில் விசாரிக்கும் படி, கோரிக்கை வைத்தது 1992 ஏப்ரல் மாதம், 7 ஆம் நாள் வழக்கு கேரளக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் தனது விரிவான புலன் விசாரணையின் முடிவில் "அபயா தற்கொலை செய்து கொண்டதாக" 1993 ஆம் ஆண்டு  ஜனுவரி 30 ஆம் நாள் வழக்கை முடித்தது. பொதுமக்கள் போராட்டத்தாலும் மக்கள் குழு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாலும் கேரள அரசு சி.பி.ஐ. விசாரணையக் கோரியது.

முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011011513020/cbi-has-not-come-straight-from-the-heaven

சனி, 8 ஜனவரி, 2011

வானத்திலிருந்து குதித்ததா சி.பி.ஐ.?

கடந்த வாரத்தின் பரபரப்பு நிறைந்த செய்திகளில், தன் விசாரணையை முடித்துக் கொள்வதாக சி.பி.ஐ. சொன்ன இரு வழக்குகள் பற்றிய செய்திகளும் அடங்கும்.

ஒன்று போஃபோர்ஸ் ஊழல் வழக்கை முடித்துக் கொள்வதாக சி பி ஐ சொன்னது.

அடுத்தது ஆருஷி கொலை வழக்கைத் தொடர முடியாமல் முடித்துக் கொள்வதாகச் சொன்னது.

மாநிலக் காவல் துறையின் சட்டம் ஒழுங்குப் பிரிவு புலனாய்வு செய்ய இயலாத அல்லது அப்பிரிவு புலனாய்வு செய்து தந்த முடிவுக்கு மாறாக மீண்டும் விசாரணை தேவைப்படும் வழக்குகளில் மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு அம்மாநில அரசுகள் உத்தரவிடும். அதிலும் நம்பிக்கையிழக்கும்போது மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணையை மாநில அரசுகள் கோரும். சிக்கலான சில வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களும்  பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கூட "சி.பி.ஐ. விசாரணை"யைக் கோருவதைக் கண்டு வருகிறோம்.

திரைப்படங்களிலும் சி.பி.ஐ. விசாரணையில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டனை அடைவர் எனக் காட்டப்படும். மலையாளத்தில், இயக்குநர் கே. மது, கதை வசன ஆசியர் எஸ்.என்.ஸ்வாமி, நடிகர்கள் மம்முட்டி, முகேஷ், ஜெகதி ஸ்றீகுமார், ஜனார்தனன் உட்பட ஒரே குழு, சி.பி.ஐ. புலனாய்வுத் தொடரில் நான்கு படங்களை வெளியிட்டது. அந்த அளவுக்கு சி.பி.ஐ. "மீமானிட ஆற்றல்கள்" கொண்ட புலனாய்வு அமைப்பாக மக்களால் கருதப்படுகிறது.

காவல்துறையின் இதரப் பிரிவினருக்கு இல்லாத சில சிறப்பு அதிகாரங்களும் விசாரணை வசதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்பதைத் தவிர  அவர்களும் காவல்துறையினரே! மாநிலக் காவல் துறையிலிருந்தே திறமையானவர்கள் எனக் கருதப்படுபவர்களைத் தெரிந்தெடுத்து சி.பி.ஐ.யில் இணைப்பர். சி.பி.ஐ.யாலும் சில குற்றங்களை நிரூபிக்க முடியாமல் வழக்கு மூடப்படும். அதற்குச் சான்றாகவே இவ்விரு செய்திகளும் வந்துள்ளன.

இதாலியத் தொழிலதிபர் குத்ரோச்சிக்கு எதிராக எவ்விதச் சான்றாதாரங்களும் இல்லாததாலும் அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க முடியாததாலும் போஃப்பர்ஸ் வழக்கை மூட விரும்புவதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

அதுபோலவே ஆருஷி கொலை வழக்கும் சி.பி.ஐ.யால் மூடப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் பிரபலமான பல் மருத்துவர்களான டாக்டர் ராஜேஷ் தல்வார் தம்பதியினரின் பதினான்கு வயதான மகள் ஆருஷி தல்வார், 2008ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி காலையில் அவர்களது "ஜல்வாயு விஹார்" ஃப்ளாட் இல்லத்தில் கழுத்தறுபட்ட நிலையில் பிணமாகக் காணப்பட்டாள். உள்ளூர்க் காவல்துறை விரைந்து வந்து விசாரணையைத் துவக்கியது. வீட்டில் தங்கியிருந்தவர்களைப் பற்றிய விசாரணையில், நேப்பாளி வேலைக்காரனான 45 வயதுடைய ஹேம்ராஜ் காணமல் போயிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவனைக் கொலையாளியாக்கி, அவனைப் பிடிக்க நேப்பாளத்துக்கு விரைந்தது ஒரு குழு. அவனைக் கைது செய்ய உதவும் தகவல் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் எனக் காவல்துறை அறிவிப்பும் செய்தது.

முறைப்படி பிணப்பரிசோதனை முடிந்து மறுநாள் ஆருஷியின் உடல் எரிக்கப்பட்டு ஹரித்துவாரில் கங்கை நதியில் சாம்பலும் கரைக்கப்பட்டது. ஆருஷியின் மரணத்துக்கு துக்கம் விசாரிக்கத் தல்வாரின் வீட்டிற்குத் தல்வாரின்  உறவினருடன் வந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், கட்டடத்தின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இரத்தக்கறை இருப்பதைக் கண்டார். காவல் துறை வந்து ரத்தக்கறையைப் பின் தொடர்ந்துசென்று மொட்டை மாடியை அடைந்தபோது, தூக்கிவாரிப் போட்டது போல அதிர்ந்து போனது! காவல்துறை கண்டது உயிரற்ற ஓர் உடலை! காவல் துறையைப் பெரும் அதிர்ச்சியடையச் செய்த பிணம் வேறு யாருடயதுமன்று; காவல்துறையால் கொலைக் குற்றத்துக்காகத் தேடப்பட்டு வரும் ஹேம்ராஜின் பிணம். திகில்ப்பட மன்னன் ஹிட்ச்காக்கின் படங்களில் வரும் அதிரடித் திருப்பம் போலக் கொலையாளியைப் பிடிக்கக் காவல் துறை வலை விரித்துக் காத்திருந்த நிலையில் கொலையாளி எனத் தேடப்படும் ஒருவனே கொலையாகிக் கிடப்பதைக் கண்டு, யார் தலையில் குற்றத்தைச் சுமத்தி வழக்கை முடிப்பது எனத் திகைத்துப் போனது நொய்டா காவல்துறை.

ஒரு குழப்பமான குற்ற விசாரணையின் முடிவில் இரட்டைக் கொலைக் குற்றத்துக்காக ஆருஷியின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வார் கைது செய்யப்படுகிறார். அதிர்ந்து போன ராஜேஷின் மனைவி, நொய்டா காவல் துறை பொய் வழக்குப் போட்டதாகக் கூறி உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியிடம் சி.பி.ஐ. விசாரணை வேண்டி முறையிடுகிறார். அதன் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கின் விசாரணையை ஏற்றெடுத்தது.

வேலைக்காரன் ஹேம்ராஜின் அறையில் கண்டெடுக்கப்பட்ட விஸ்கி பாட்டிலில் இருந்த கைரேகையையோ இறந்தவர்களின் உடல்களில் பதிந்திருந்த கைரேகைகளையோ சேகரிக்காமல், அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொள்ளாமல், குற்றச் செயல் நடந்த இடத்தில் செய்தியாளர்களை அனுமதித்துக் குற்றப்புலனாய்வுக்கு உதவும் அடிப்படைச் சான்றுகளைப் பாதுகாக்காமல் அழித்துவிட்டதாகவும் போஸ்ட்மார்டமும் முறைப்படி ஒழுங்கான முறையில் நடத்தவில்லை எனவும் நொய்டா காவல்துறை மீது குற்றம் சுமத்திய சி.பி.ஐ, தன் முதல் கட்ட விசாரணையில், ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராஜேஷ் தல்வாரின் பல்மருத்துவமனைக் கம்பவுண்டரான நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணாவைக் கைது செய்தது.

தொடர்ந்து தல்வார் குடும்ப நண்பரின் வீட்டு நேப்பாளி வேலைக்காரன் ராஜ்குமாரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுகிறான். டாகடர் தம்பதியர் உட்பட அனைவரும் சி.பி.ஐ.யால் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிணையும் மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஜ்தக் இந்தித் தொலைக்காட்சி, விஜய்மண்டல் என்பவனும் இந்த இரட்டைக் கொலையில் ஈடுபட்டதாகப் பரபரப்புச் செய்தி வெளியிட்டது. தல்வாரின் அண்டை வீட்டு வேலைக்காரனான விஜய் மண்டலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுகிறான். விஜய்மண்டலிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான தகவலை அடுத்து அவன் மீது ஐ.பி.சி. 302, 201, 120(B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்படுகிறது. ராஜ்குமார், விஜய் மண்டல் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆரூஷியைக் கற்பழித்துக் கொன்றதாகவும் அக்கொலை வெளியாகாமல் இருக்க, வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் கொலை செய்ததாகவும் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. அதுவரை ராஜேஷ் தல்வார் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபிக்க எவ்விதச் சான்றும் சி.பி.ஐ.யின் கைவசம் இல்லா நிலையில் 2008 ஜூலை 12 ஆம் தேதி அவர் பிணையில் விடுதலையாகிறார்.

இதனிடையே, இவ்வழக்கு அரசியல் தளத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. டாக்டர் ராஜேஷ் தல்வாரைக் காப்பாற்றவே கிருஷ்ணா மற்றும் ராஜ்குமார் எனும்  இரு நேப்பாளிகளைக் கைது செய்ததாக நேப்பாள நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப் போவதாக நேப்பாள அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார். விஜய் மண்டலிடமிருந்து கொலைக்கான ஆயுதம் எதையும் கைப்பற்ற முடியாமல் திகைக்த சி.பி.ஐ. முட்டுச் சந்தில் நின்றது.

கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சி.பி.ஐ. இவ்வழக்கை மூடுவதாக நீதிமன்றத்தில் சொன்னது. கைது செய்யப்பட்டுச் சித்திரவதைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு உலகின் முன் கொலையாளிகளாக இழிவு படுத்தப்பட்ட கிருஷ்ணா, ராஜ்குமார் மற்றும் விஜய் மண்டல் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்றும் ஆருஷியின் தந்தை ராஜேஷ் மீது மட்டுமே குற்றத்தின் சந்தேக நிழல் படிந்திருப்பதாகவும் ஆனால் குற்றத்திற்கான நோக்கம் தெளிவாகவில்லை என்றும் சொல்லி வழக்கை மூடக்கோரியது சி.பி.ஐ.

இவ்வழக்கு விசாரணையின் போது ராஜேஷ் தல்வாருக்கும் மற்றொரு பெண் மருத்துவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் ஆருஷி கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணை அதிகாரிகளால் ஊடகங்களுக்குச் செய்திகள் கொடுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டதற்கு என்ன விலை?

ஆருஷி வழக்கைப் போலவே சி.பி.ஐ. பின்வாங்க முயன்றும் முடியாமல் தவிக்கும் மற்றொரு வழக்கு நாடாளுமன்றத்தையும் கேரள சட்டசபையையும் உற்றுநோக்க வைத்த "ஸிஸ்டர் அபயா கொலை வழக்கு".

அது அடுத்த வார அலசலில்....

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)

சனி, 1 ஜனவரி, 2011

பி.ஏ.சி.யும் ஜே.பீ.சி.யும்

அலைக்கற்றை (2 ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர்க்கட்சிகள் ஜே.பீ.சீ. (நாடாளுமன்றக் கூட்டு நடவடிக்கைக் குழு)தான் வேண்டும் என்று அடம் பிடித்து நிற்கின்ற வேளையில் பிரதமர் மன்மோகன்சிங் தாம் பீ.ஏ.சீ. யின்(பொதுக்கணக்குக் குழு) முன் ஆஜராவதாகச் சொல்லியுள்ளார். பொதுக்கணக்குக் குழுவின் தலைவரும் பீ.ஜே.பி.யின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான முரளிமனோஹர் ஜோஷி இதற்கு ஆதரவாக உள்ள நிலையில், பீ.ஜே.பி.யின் மற்ற தலைவர்கள் இதற்கு எதிராக உள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் தி மு க கலங்கி நிற்க வேண்டிய தருணத்தில் பீ.ஜே.பி குழம்பி நிற்கும் சூழ்நிலை உருவாகி இருப்பது அரசியல் திருப்பத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பையும் அரசியல் நோக்கர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தப்படி உருவாக்கப்பட்ட "பி.ஏ.சி" எனப்படும் பொதுக்கணக்குகள் குழு, இந்தியா குடியரசான பின் அவைத்தலைவருக்குக் கட்டுப்பட்ட நாடாளுமன்றக் குழுவாக உருமாற்றம் பெற்றது. நாடாளுமன்ற நடவடிக்கை விதி 308 இன் படி ஆண்டுக்கொரு முறை உருவாக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு, மக்களவையின் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையின் 7 உறுப்பினர்களும் அடங்கியது. அதன் தலைவராக 1967 ஆண்டிற்குப் பின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தெடுக்கப்படும் மரபால் இப்போது பீ.ஜெ.பீ.யைச் சேர்ந்த முரளிமனோஹர் ஜோஷி தலைவராக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செலவுகள் முறையாக அவ்வினங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளனவா என்பதைப் பொதுக் கணக்குகள் குழு சரிபார்க்கும். தணிக்கைக் குழுத் தலைவர் (சி & ஏ. ஜி) ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்கும் அறிக்கையைப் பரிசீலித்து, அதில் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில், பொருளாதார முறைகேடுகள் நடைபெற்றனவா, அனுமதிக்கப்பட்ட நிதி முறையற்றுச் செலவிடப் பட்டுள்ளதா என விசாரிக்கவும் இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

பாரதீயஜனதா கட்சி உட்பட எதிர்க்கட்சிகள், 'பொதுக்கணக்குகள் குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது; அக்குழு கணக்கு முறைகேடுகளை மட்டுமே ஆராய முடியும். ஸ்பெக்ட்ரம் விவகாரம் கணக்கு முறைகேடு அன்று; அது அரசின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தவறு. அதை நாடாளுமன்றக் கூட்டுக்குழு மட்டுமே விசாரிக்க முடியும்; ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த மர்மங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழுதான் வேண்டும்' எனக் கோருகின்றன.

பி.ஏ.சி. தலைவராக உள்ள முரளி மனோகர் ஜோஷி, பிரதமர் தம் குழுவின் முன் ஆஜராகப் போவதாகக் கடிதம் எழுதிய உடன், ஆர்வக்கோளாறில் பி. ஏ.சி. விசாரணையே போதும் எனச் சொல்லிவிட்டார். இது பீ.ஜே.பி.க்குள் ஒரு குலுக்கத்தை ஏற்படுத்தியதைத் தாமதமாக உணர்ந்த முரளி மனோஹர் ஜோஷி, கட்சித் தலைவர் கட்காரியைச் சந்தித்து, பி.ஏ.சி. தலைவர் என்ற முறையில் தாம் அப்படிக் கூறியதாகவும் ஜே.பீ.சி.யே தீர்வு என்பதுதான் தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறியுள்ளது பீ.ஏ. சி.யிலும் பீ.ஜே.பி.யிலும் அவர்மீதுள்ள நம்பகத்தன்மையை ஐயப்படுவதற்கு வழிவகுத்து விட்டது. இப்படி ஒரு நிலைமையையே காங்கிரஸும் விரும்புகிறது.

காங்கிரஸ் ஏன் ஜேபீசி வேண்டாம் என்கிறது?

ஆண்டுக்கொரு முறை அமைக்கப்படும் பொதுக்கணக்குகள் குழு போன்று ஜே.பீ.சி. அமைத்துவிட முடியாது. ஜே.பீ.சி. என்பது ஒரு தேவைக்காக அமைக்கப்படும் தற்காலிகக் குழுவாகும்.ஆனால் அதன் அதிகாரங்கள் பொதுக்கணக்குகள் குழுவை விட அதிகமாகும்.அரசுத் துறைகளின் கோப்புகளையும் ஆவணங்களையும் பரிசோதிக்கவும் துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் முறைகேட்டில் பலன் பெற்ற தொழிலதிபர்களையும் விசாரிக்கவும் அதிகாரம் உண்டு. பிரதமரைக்கூட இக்குழு அழைத்து விசாரிக்க முடியும். நுட்ப வல்லுநர்களின் ஆலோசனையையும் அறிவுரையையும் பெற முடியும்.

கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களவையின் இரு மடங்கும் மாநிலங்களவையின் ஒரு மடங்கும் அடங்கிய ஜே.பீ.சீ.யில் தனியாக காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்காது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள ஜே.பீ.சீ.யின் விசார ணைகள் ரகசியமாவே நடைபெற்றாலும் சில உறுப்பினர்கள் அவ்வப்போது ஊடகங்களுக்குச் செய்தியைக் கசிய விடுவதன் மூலம் ஆளுங்கட்சியை நெருக்கடிக்குள்ளாக்கலாம். ஜே.பீ.சி.மட்டுமே தேவை என எதிர்க்கட்சிகள் கோருவதிலும் ஆளுங்கட்சி ஜே.பீ.சீ. அமைக்க மறுப்பதிலும் நாட்டு நலன் என்பதைவிட அரசியல் நலனே மேலோங்கி இருக்கிறது என்பது கவலைக்குரியது.

(ரஸ்ஸலின் அனைத்து அதிரடி அலசல்களையும் இங்கும் காணலாம்)