மன்னராட்சியாயினும் மக்களாட்சியாயினும் சர்வாதிகார ஆட்சியாயினும் -- ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர --ஆள்வோருக்கு மக்கள் சேவை என்பதை விட அதிகாரம் என்பது போதையாகவும் செல்வம் சேர்க்கும் வழியாகவும் இருந்திருக்கிறது என்பதே வரலாறு காட்டும் உண்மை.
சேர சோழ பாண்டிய பல்லவர்களும் களப்பிரர்களும் நாயக்கர்களும் நவாபுகளும் மராட்டியர்களும் மவுரியர்களும் குப்தர்களும் மகதர்களும் மங்கோலியர்களும் நாடுபிடிக்கத் துடித்ததும் அலெக்ஸாண்டர் பல நாடுகளை வென்றதும் மக்கள் சேவைக்காகவா? கஜினிமுகமதுவும் கோரிமுகமதுவும் இந்தியாவுக்குப் படையெடுத்தது இந்திய மக்களைக் கடைத்தேற்றவா? அல்லது ஆங்கிலேயர்களும் ஐரோப்பியர்களும் இந்தியாவைப் பங்கு வைத்து ஆண்டது பொதுநலத்தாலா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக