இரு மாதங்களுக்கு முன் பொதுவுடைமைப் போராளி ஜீவாவின் பேத்தியின் மண விழாவில் வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, "இன்றைக்கு என்னவோ, அரசியல் நாகரிகம் என்றால் என்ன விலை - எந்தக்கடையிலே விற்கிறது என்று கேட்கின்ற அளவுக்கு - விசாரிக்கின்ற அளவுக்கு நாகரிகம் நலிந்து போய்விட்டது. நசிந்து போய் விட்டது" என்று பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் இழிவாகப் பேசியதாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் வேண்டி நோட்டீஸ் கொடுத்துள்ளது.
***************
***************
பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் இடையே நடந்த போரில், துரோணர் கெளரவர் பக்கம் நின்று கடும்போர் புரிந்தார். பதினைந்தாம் நாள் போரில் துரோணர் பாண்டவர் படைகளைச் சிதறடித்துக் கொண்டிருந்தார். பிரம்மாஸ்திரத்தை எய்யத் துணிந்த அவரைத் தடுத்து நிறுத்தாவிடின் பாண்டவர் படைக்குப் பேரிழப்பு ஏற்படும் என்று உணர்ந்த கண்ணன் பீமனை அழைத்து, "துரியோதனனின் யானையான அஸ்வத்தாமன் நம் படைகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதால் அதைக் கொன்று விடு" என்றான். பெரும் பலசாலியான பீமன் தன் கதாயுதத்தால் யானை அஸ்வத்தாமனைக் கொன்றான். வெற்றி ஒன்றே குறிக்கோளாகி விட்ட போரில் வெற்றி பெறுவதற்கு எவ்விதச் செயலையும் செய்யலாம் எனத் தீர்மானித்த கண்ணன், துரோணரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன் என்பதால், "அஸ்வத்தாமனைக் கொன்று விட்டேன்" எனத் துரோணரின் காதுபடப் பீமனைக் கூச்சலிடச் செய்தான். யாராலும் வெல்ல முடியாத தம் மகன் அஸ்வத்தாமனைப் பீமன் கொன்றிருப்பான் என துரோணர் நம்பி விட்டார்.
முழுமையாக வாசிக்க : http://www.inneram.com/2011040915370/political-culture

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக