"நாட்டில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் நடந்துவிட்ட குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதற்கும் காவல்துறைக்குக் கோடிக்கணக்கில் செலவுகள் செய்கின்றன அரசுகள். விரைந்து செல்ல வாகனங்களையும் புலனாய்வுக்கு உதவுவதற்காக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகளையும் அரசுகள் காவல்துறைக்கு அளிக்கின்றன. இருந்தபோதிலும் குற்ற வழக்குகளில், அதுவும் கொலை போன்ற கொடிய குற்ற வழக்குகளில் விரிவான ஆழமான, அறிவியல் ரீதியிலான புலனாய்வுக்கு மெனக்கிடாமல், கையில் கிடைத்த அப்பாவிகளைக் குற்றவாளியாக்குவதில் போலீஸ் எவ்விதத் தயக்கமும் காட்டுவதில்லை என்பதையே முன் சொன்ன வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு சடலம் கிடைத்தது என்றால் மரண காரணம் இயற்கை மரணமா கொலையா தற்கொலையா விபத்தா என முதலில் ஆராய்வர். பின் இறந்தவரை அடையாளம் காண முயல்வர். இறந்தவர் யார் என ஊகித்தாலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள மரபணு சோதனை போன்ற எத்தனையோ நவீன அறிவியல் ஆய்வுகள் இருக்கின்றன.
முழுமையாக வாசிக்க : பொய்க்குற்றசாட்டும் போலீஸ் முறையும் -2
ஆனால் பொதுவாக, நகை திருட்டில் நகைகளை எப்படித் திரும்பப் பெறுகிறார்கள் என்பதைப் பல வழக்குகளில் நான் கண்டும் கேட்டும் பத்திரிகைகளில் படித்தும் அறிந்துள்ளேன்.
