"நாட்டில் பல திருட்டு, களவு, கொள்ளை போன்ற சம்பவங்களில் பணம், நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், கார், பைக் போன்றவை திருடப்படுகின்றன. அவற்றைத் திருடியவர்களைக் கண்டுபிடித்துப் பொருட்களை மீட்டு உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்ததாக எப்போதாவது புகைப்படத்தில் போஸ் கொடுத்தபடி நிற்கும் போலீஸார் அளித்த செய்தி நாளிதழ்களில் வரும். இதில் உண்மையான திருடர்கள் பிடிபட்டார்களா, பொருட்கள் அத்திருடர்களிடமிருந்துதாம் மீட்கப்பட்டனவா என்பனவற்றை யாரும் துருவுவதில்லை. ஒரு செய்தியாகப் படித்துவிட்டு அடுத்த செய்திக்குத் தாவி விடுவோம்.
ஆனால் பொதுவாக, நகை திருட்டில் நகைகளை எப்படித் திரும்பப் பெறுகிறார்கள் என்பதைப் பல வழக்குகளில் நான் கண்டும் கேட்டும் பத்திரிகைகளில் படித்தும் அறிந்துள்ளேன்.ஏதாவது ஒரு திருட்டு வழக்கில் சிக்கும் ஒருவன் மீது, அந்தக் காவல்நிலையத்தில் நிலுவையில் இருக்கும் நகைத் திருட்டு வழக்குகளைச் சுமத்தி மொத்தம் எத்தனை பவுன் நகை தேவை எனக் கணக்கிட்டுக் கொள்வர். பிறகு அவனை நகரில் இருக்கும் நகைக் கடைகளுக்குக் கூட்டிச் சென்று இங்குதான் இத்தனை கிராம் மதிப்புள்ள நகையைக் கொடுத்தேன் என அவனைக் கூறச்செய்வர். கடையின் வியாபாரம் மற்றும் நற்பெயருக்கு ஏற்படும் களங்கம், வழக்கு, வாய்தா என அலைச்சல், மன உளைச்சல் ஆகியவற்றுக்கு அஞ்சி கடைக்காரர் தம் கடையில் இருந்து ஏதோ ஒரு நகையைக் கொடுத்துத் தலையை உருவிக் கொள்வார். இப்படித் தேவைப் பட்டதற்கும் மேலேயே எடுத்துக் கொள்ளும் போலீஸ்.
முழுமையாக வாசிக்க : பொய்க்குற்றசாட்டும் போலீஸ் முறையும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக