எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது, “ஆறு மாதங்கள் வாளா இருப்போம்; அதன் பிறகு வாளாக இருப்போம்." எனப் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகக் கருணாநிதி கூறினார். ஜெயலலிதா இரு முறை முதல்வராக இருந்து ஊழல்களும் அதிகார அத்துமீறல்களும் புரிந்து, மக்களால் தண்டிக்கப்பட்டுப் பதவியிழந்து அனுபவப்பட்டவர் என்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் காலக்கெடு தேவையில்லை. உடனடியாக விமர்சிக்கலாம்; எதிர்க்கலாம்.
இப்போதைய தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று வென்றவுடன், அரசின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாகவும் அரசைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவும் ஜெயலலிதா சொன்னார். புதிதாகப் பதவியேற்கும் எந்த அரசும் பழைய அரசின் மீது வைக்கும் முதல் குற்றச்சாட்டுகளுள் ஒன்று இதுவாகத்தான் இருக்கும். ஜெயலலிதா கூறியதில் உண்மை இல்லாமலுமில்லை. தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் பொறுப்புகள் 2009 -- 2010 ம் ஆண்டு இறுதியில் 89,149 கோடி ரூபாயாக இருக்கின்றன. கடந்த ஆட்சியின் போது தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் இலவச / நலத்திட்டங்கள் மட்டுமின்றி, ஜெயலலிதா தம் தேர்தல் அறிக்கையில் வாக்களித்திருந்த இலவசங்களான அம்மி முதல் ஆட்டுக்குட்டிவரை மக்களுக்கு வழங்கவும் நிதி வேண்டும். இதை எப்படி ஈடுகட்டப் போகிறது புதிய அரசு என்ற வினா எல்லோர் மனங்களிலும் எழுகிறது.
முழுமையாக வாசிக்க.. http://www.inneram.com/2011052116699/jeyas-starting