தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததையடுத்து 'உன்னாலே நான் தோற்றேன்' என்ற கூச்சல் இரு கூடாரங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது."கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற கருணாநிதியின் 'பிறந்தநாள் செய்தி' இதற்கு உரமூட்டி இரு தரப்பிலும் உரசல்களை உருவாக்கியது.2 ஜி வழங்கியதில் லஞ்சம் பெற்ற வழக்கில் திகார் சிறையில் வாடும் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக இரண்டாம் முறை டெல்லி சென்ற கருணாநிதியைக் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என இளைஞர் காங்கிரசார் குரல் எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக