சனி, 25 ஜூன், 2011

ஜெயலலிதாவின் கமிஷன்


ஜெயலலிதாவின் அதிரடித் துவக்கம் என்ற தலைப்பிலான அலசலில் "கருணாநிதி கட்டினார் என்பதற்காகப் புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதாவே, "வசதிக் குறைவானது" என அறிவித்த கோட்டைக்கு மீண்டும் மாற்றுவது, ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

அதே இறுமாப்பு.......அதே பிடிவாதம்..... அதே ஊதாரித்தனம்........ கருணாநிதி கட்டினார் என்ற ஒரே காரணத்திற்காகவே மக்களின் சுமார் 910 கோடி வரிப்பணத்தை உதாசீனம் செய்து, கோட்டைத் தலைமைச் செயலகத்துக்காக  மக்கள் வரிப்பணத்தை மேலும் வாரியிறைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்........" என்றும்  "அடுத்து, தலைமைச் செயலகம் கட்டியதில் மாபெரும் ஊழல், நிதி முறைகேடு என்ற குற்றச்சாட்டில் கருணாநிதியும் சில அமைச்சர்களும் கைது செய்யப் படலாம். அதற்கு வசதியாக, ஜெயலலிதாவின் கடந்த ஆட்சியில் கருணாநிதியை ‘விடியும் முன் கைது’—pre dawn arrest -- செய்ததால் நாகர்கோவில் போக்குவரத்துக் கழகக் கண்காணிப்புப் பிரிவிற்குக் கருணாநிதியால் கடாசப் பட்ட ஜார்ஜை, சட்டம் ஒழுங்கு ஏ டி ஜி பி ஆக மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா…." என்றும் குறிப்பிட்டிருந்தேன் .. என் எதிர்பார்ப்பை ஜெயலலிதா வீணாக்கவில்லை. இப்போது  "புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் உள்ள முறைகேடுகளை விசாரிக்கக் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது"....என வந்துள்ள செய்தி இதை மெய்ப்பிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக