"கட்டிய மனைவி தொட்டில் பிள்ளைஉறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே"
எனக் கவிஞர் வாலி படகோட்டித் திரைப்படத்தில் எழுதிய பாடல் இன்று தமிழக மீனவர்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது.
பண்டைய நாட்களில் மீனவர்களுக்குக் "கடலம்மா" கோபமுற்றால் மட்டுமே இழப்பு வரும். இயற்கைச் சீற்றத்தால் எழும் புயலும் மழையும் அலைகளின் ஆழித் தாண்டவமும் அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும். இப்போது அதிநவீன எந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகள், திசைமாறிப் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவும் காவல் படகுகள், ஹெலிகாப்டர் தேடுதல்கள் என வசதிகள் பெருகி விட்டதால் உயிர் இழப்புகளைப் பற்றிய கவலை இன்றி நாட்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். ஆனால் தமிழக மீனவனுக்கு மட்டும் இன்னல் தீரவில்லை. ஆம் அவனது இன்னல் இலங்கைக் கடற்படை வடிவில் தொடர்கிறது.
முழுமையாக வாசிக்க : இலங்கைக் கடற்படைக்கு இரையா தமிழக மீனவன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக