தேசபக்தியை மொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் சங்பரிவார், அதை உலகுக்கு உணர்த்துவதற்காகக் காஷ்மீரில் குடியரசு நாளில் மூவண்ணக் கொடியேற்றுவதற்காகப் பல இடங்களிலும் இருந்து ஆட்களைத் திரட்டிக் கொண்டு சென்றது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆர் எஸ் எஸ் அபிமானிகள் தங்களைத் தவிர மற்றவர்களுக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு - 'அது' இல்லை என வலைத்தளங்களில் திட்டித் தீர்த்தனர்.
"ஒரு நாட்டில் அமைதியும் ஒருமைப்பாடும் நிலவும்போதுதான் அந்நாடு மற்றவர்களால் மதிக்கப்படும். எட்டு மதங்களும் எண்ணத்தொலையா ஜாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் நூற்றுக்கணக்கான மொழிகளும் அவற்றைவிட அதிகமான கட்சிகளும் இருந்தும் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் இந்தியாவில் வாழும் அனைவரின் தேசபக்தியும் அர்ப்பணிப்பும் உழைப்பும்தாம் காரணங்களே தவிர, வெற்று 'தேசபக்திக் கூச்சல்' போடும் சங்பரிவார் அங்கங்கள் அல்ல" எனக் கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.பீஜேபியின் காஷ்மீர் யாத்திரை மீண்டும் அதை நிரூபித்து விட்டது.
முழுமையாக வாசிக்க : சங்பரிவாரும் தேசீயச் சின்னங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக