ஆருஷி மற்றும் ஹேம்ராஜின் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் -- ஆனால் சந்தேகத்தின் நிழலை டாக்டர் ராஜேஷ் தல்வாரின் மீது சாய்த்துவிட்டு -- வழக்கை மூட முனையும் சி.பி.ஐ.யிடம், 'வழக்கை மூட ஏன் இந்த அவசரம்' என வினவிய காஜியாபாத் சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற மாஜிஸ்திரேட் ப்ரீதி சிங், இம்மாதம் (ஜனுவரி) 21 ஆம் தேதிவரை இதன் மீதான விசாரணையை ஒத்திவைத்து, வழக்கை மூடும் அறிக்கை உட்பட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆருஷியின் பெற்றோருக்கு வழங்கும்படி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறாம் தேதி ஆருஷியின் நண்பர்களும் உறவினர்களும் மத்திய டில்லியின் ஜந்தர்மந்தர் முன் ஆருஷியின் கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுவிசாரணை கோரியுள்ளனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் Polygraph, Narco Analysis, Brain maping என விதம் விதமான உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்ட பின்னரும் உண்மையான குற்றவாளி அல்லது குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் சி.பி.ஐ. வழக்கைக் கை கழுவுகின்றது எனில், சி.பி.ஐ. என்ற மாயை தகர்கிறது என்றுதான் பொருள். இப்படித்தான் ஸிஸ்டர் அபயா கொலை வழக்கிலும் சி.பி.ஐ. கை கழுவ முனைந்தது.
கோட்டயத்தில் இருக்கும் 'பயஸ் 10 கான்வெண்'டில் தங்கியிருந்த, கோட்டயம் பி.சி.எம். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ப்ரிடிகிரி வகுப்பு மாணவியான கன்னியாஸ்திரி அபயா, 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் திடீரெனக் காணமல் போனார். கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் "காணவில்லை" என வழக்குப் பதிவு செய்தனர். தேடுதலின்போது அக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.வி. அகஸ்டின் முன்னிலையில் அந்தக் கான்வெண்டின் காம்பவுண்டுக்குள் இருக்கும் கிணற்றில் இருந்து, 19 வயதேயான அபயாவின் உயிரற்ற உடல் மீட்கப்பட்டது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் பிணப்பரிசோதனை நடத்தினார். அபயாவின் மரணம் தற்கொலை என முடிவு செய்து அறிவிக்கபட்டது.
ஆனால் மார்ச் மாதம் 31ஆம் தேதி அமைக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டக்குழு, கேரள மாநில முதல்வர், இந்தியப் பிரதமர், ஜனாதிபதி, உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி, காவல்துறைத் தலைவர் என அனவருக்கும் இவ்வழக்கைச் சரியான முறையில் விசாரிக்கும் படி, கோரிக்கை வைத்தது 1992 ஏப்ரல் மாதம், 7 ஆம் நாள் வழக்கு கேரளக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சி.பி.சி.ஐ.டி.) மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி.யும் தனது விரிவான புலன் விசாரணையின் முடிவில் "அபயா தற்கொலை செய்து கொண்டதாக" 1993 ஆம் ஆண்டு ஜனுவரி 30 ஆம் நாள் வழக்கை முடித்தது. பொதுமக்கள் போராட்டத்தாலும் மக்கள் குழு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாலும் கேரள அரசு சி.பி.ஐ. விசாரணையக் கோரியது.
முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011011513020/cbi-has-not-come-straight-from-the-heaven


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக