கடந்த இரு வாரங்களுக்கு முன் எழுதியிருந்த அலசலில், தி மு க கூட்டணியில் காங்கிரஸால் உருவான சிக்கல்களையும் அக்கட்சியின் கோஷ்டிப் பூசல்களால் ஒருவருக்கொருவர் காலை வாரும் வாய்ப்பு உள்ளது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ்நாட்டில், வேட்பாளர் தேர்விலும் வேட்பு மனு அளிப்பதிலும் அக்கட்சியின் கோஷ்டிப்பூசல் இத்தேர்தலிலும் தெள்ளத் தெளிவானது. கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்து கையெழுத்திட, அறிவாலயத்துக்குக் கட்சியின் ஐவர்குழுவை அழைக்காமலே சென்றார் தங்கபாலு. டெல்லியில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் தேர்வில் G K வாசனின் கைதான் ஓங்கி இருக்கிறதாம். அவரது கோஷ்டி ஆட்கள்தாம் அதிகமாம். சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், பிரபு என காங்கிரஸுக்குள் இருக்கும் குட்டிக் கட்சிகள் தம் வேட்பாளார்களைக் களமிறக்கியுள்ளன. கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஹஸீனா ஸையத் மற்றும் மக்பூல்ஜான் குழப்பமும் மயிலாப்பூரில் ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஏற்பட்ட எதிர்ப்பும் அதைத் தொடர்ந்து மகிளாகாங்கிரஸார் தீக்குளிக்க முயன்றதும் கட்சி அலுவலகம் கட்சித் தொண்டர்களாலேயே சூறையாடப்பட்டதும் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வழி உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் பரபரப்பான அல்லது நகைச்சுவையான அல்லது வெறுப்பூட்டிய செய்திகளாயின.
முழுமையாக வாசிக்க.... http://www.inneram.com/2011040215140/loosing-victory-from-hand

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக