"கடந்த வார அலசலில் தி மு க கூட்டணிக்குள் காங்கிரஸ் கலகம் செய்யாமல் ஒத்துழைக்க வேண்டும்; இல்லையெனில் தி மு கவுக்கு அடுத்த ஆட்சி எட்டாக்கனியாகி விடும் என்று எழுதியிருந்தோம். காங்கிரஸ் அறுபது இடங்களுக்கு ஒப்புக்கொண்டு முடிவுக்கு வருவார்கள் என்றிருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் இருந்து வந்திருந்த குலாம்நபி ஆசாத் சொல்லிக் கொள்ளாமல் டெல்லிக்குச் சென்று அங்கிருந்து அறுபத்துமூன்று இடங்கள் வேண்டும் என இக்கட்டைத் தோற்றுவிக்கவே, கடுப்பான கருணாநிதி, "காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்டு நெருக்கடி தருவதால் மத்திய அரசிலிருந்து ஆறு தி மு க அமைச்சர்களும் விலகுவார்கள்" என அறிவித்தார்.
இதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், தமிழர் அமைப்பைச் சேர்ந்த சுப வீரபாண்டியன் ஆகியோர் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன், தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக மகிழ்ந்தார். பல ஊர்களில் காங்கிரஸ் மற்றும் தி மு க வினர் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்ததாகவும் செய்திகள் வந்தன.முழுமையாக வாசிக்க : தி மு க ஆட்சி... கனவு பலிக்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக