"நாளுக்கு நாள் மாறி வரும் அரசியல் நிலைமாற்றம், எதிர் வரும் 2011 ஆம் ஆண்டு சட்ட மன்றப் பொதுத்தேர்தலில் தி மு க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்குமா என்ற வினாவைப் பல மட்டத்திலும் எழுப்பியுள்ளது. தி மு க, காங்கிரஸ், பா ம க, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி, எதிரணியை விட வலிமையானதாகக் கருதப்பட்டது.
ஓய்விலிருந்து இன்னும் முழுமையாக வெளிவராத ஜெயலலிதாவின் கூட்டணியில் அ இ அ தி மு க வைத் தவிர, பெரும் ஓட்டு வங்கி உள்ள பெரிய கட்சி எதுவும் இல்லை. தே மு தி க வை நடிகர் விஜயகாந்த் துவக்கியபோது இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று என்ற நம்பிக்கையில் தே மு தி க -வுக்குப் பொதுமக்கள் அளித்த வாக்குகளே இப்போது அவரையும் கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதாவை நிர்பந்தித்தன என்ற உண்மையை இருவருமே உணரவில்லை. தற்போது அ இ அ தி மு க அணியில் விஜயகாந்த் இருப்பதால் முன்னர் அவருக்கிருந்த பொதுமக்கள் ஆதரவு இப்போதும் கிடைக்குமா என்பது ஐயத்திற்குரியது. விஜயகாந்த் அ இ அ தி மு க கூட்டணியில் இணைந்திருப்பதன் மூலம் மற்றொரு வைகோ ஆக மாறும் வாய்ப்பே அதிகம். முழுமையாக வாசிக்க : அடுத்த ஆட்சி தி மு க வுக்கு எட்டாக்கனி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக