நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிரான அல்லது எதிர்கட்சிக்கு ஆதரவான வெளிப்படையான அலை ஏதும் இல்லா நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜெயலலிதாவுக்கும் அவர் தலைமையிலான கட்சிக்கும் வாழ்த்துகள்.
தி.மு.க. கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்றும் அலசல் பகுதியில் எழுதியிருந்தோம். கருணாநிதி அரசு மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்களும் இலவசங்களும் மக்களின் ஆதரவைத் தரும் என்றும் கருணாநிதி அமைத்த கூட்டணி வலிமையானது என்றும் கருதியதன் அடிப்படையிலும் வெளிப்படையான அலைகள் ஏதும் இல்லை என்பதாலும் அவ்வாறு எழுதியிருந்தோம். உலகெங்கும் வாழும் தமிழர்களோடு உறவுள்ள இந்நேரம் தளம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ எதிராகவோ இல்லா நிலையிலும் எனக்கு எழுத்துச் சுதந்திரம் தந்து அலசலை எழுத அனுமதித்துள்ளது. கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சித்து அவரின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி எழுதிய அலசல்களையும் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று எழுதிய அலசலையும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து எழுதிய அலசலையும் இந்நேரம் தளம் வெளியிட்டுள்ளது. ரஸ்ஸல் எக்கட்சிக்கும் ஆதரவாளனல்லன்.மக்களுக்கு மட்டுமே ஆதரவாளன். தமிழக மக்கள் நடத்தியுள்ள மவுனப்புரட்சிக்கு மதிப்பளிக்கிறேன்.
முழுமையாக வாசிக்க ... http://www.inneram.com/2011051416524/jayalalitha-as-cm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக