தி.மு.க, 1996 தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, 1967 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது போன்று, தமிழ்நாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறும் நிகழ்வாகும். தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட வை.கோபாலசாமி 1994 ஆம் ஆண்டில் ம.தி.மு.க எனத் தனிக்கட்சி தொடங்கி, பல மாவட்டச் செயலாளர்களையும் உற்சாகம் மிக்க தொண்டர்களையும் தம்முடன் அழைத்துச் சென்ற பின்னரும் தி மு க பலவீனப்படவில்லை. 96 இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதற்குக் காரணமும் ஜெயலலிதாவே! 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி உறவு கொண்டு, அவரின் மரணம் மக்களின் மனங்களில் ஏற்படுத்திய பாதிப்பால் 164 தொகுதிகளில் வென்ற அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. ஜெயலலிதா முதல்வரானார். தி மு க சென்னையில் மட்டும் வென்று இரண்டே இடங்களைப் பெற்றது. அவ்விரண்டில் ஒன்று கருணாநிதி துறைமுகம் தொகுதியில் வென்ற இடமாகும்.
ஆனால் 1996 தேர்தல், முந்தைய தேர்தலின் வரலாற்றைத் தலைகீழாகத் திருப்பியது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆடம்பரங்களும் ஆணவப்போக்கும் மக்களை மட்டுமின்றி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அவரின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸையும் வெறுப்படையச் செய்திருந்த நிலையில்,1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்த பிரதமர் நரசிம்மராவ் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தார். இதை விரும்பாத காங்கிரஸார் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் தனிக்கட்சி தொடங்கி, தி மு க வுடன் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தனர்.
அத்தேர்தலில் தி.மு.க 173 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க, அ.இ.அ.தி.மு.க வெறும் நான்கே இடங்களில் வென்றது. அவற்றுள் இரண்டு தத்தம் தொகுதிகளில் தனிச் செல்வாக்குப் பெற்றிருந்த அறந்தாங்கி எஸ். திருநாவுக்கரசும் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரைக்கனியும் வென்ற இடங்களாகும். கட்சித் தலைவியாயிருந்த முதல்வர் ஜெயலலிதாவும் தோற்றுப்போனார்.
நாடாளுமன்றத்தில் த.மா.க-தி.மு.க கூட்டணி 37 இடங்களைப் பெற்றபோது அ.இ.அ.தி.மு.கவிற்கு நாடாளுமன்றத்தில் ஓர் இடம் கூடக் கிடைக்கவில்லை.
"ஆற்றங்கரை மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே!" ஜெயலலிதா ஆட்சியை இழந்தது மட்டுமின்றி அவர் மீதும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் ஊழல் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இமெல்டா மார்கோஸை நினைவுபடுத்தும் வண்ணம் காணப்பட்ட ஜெயலலிதாவின் ஆடை அணிகலன்களும் காலணிகளும் கூடக் காட்சி ஊடகங்களில் அன்றாடம் ஒளிபரப்பப்பட்டன. அந்த வழக்குகளுள் ஒன்றிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கோபமுற்ற அ.இ.அ.தி.மு.க வினரால் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடுமையான சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஆனாலும் ஜெயலலிதா தம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் கருணாநிதி மீதான தம் பகையைத் தீவிரப்படுத்தினார். குடும்பமோ குழந்தைகளோ இல்லாத தம்மைக் கருணாநிதியும் அரசும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவதாக மக்களிடம் சொன்னார்.
ஜெயலலிதாவின் தவறுகளையும் குறைகளையும் மக்கள் மறக்கும் வண்ணம் கருணாநிதியின் அரசியல் ஆசைகள் உருப்பெற்றதால், 2001 தேர்தலில் தி.மு.க தோற்று அ.இ.அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
மத்தியில் ஆண்ட வாஜ்பாயியின் பா.ஜ.க அரசுக்குக் கருணாநிதி ஆதரவு கொடுத்தார்; இது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை அவரிடமிருந்து விலகச் செய்தது.
1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி கோவையில் ஒரு முஸ்லிம் இளைஞரால் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மேல் விரோதம் கொண்டிருந்த சில மதத்தீவிரவாதக் குழுக்கள் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதிவரை கோவையில் நடத்திய கலவரத்தில் பத்தொன்பது முஸ்லிம்களைக் கொன்றனர்; முஸ்லிம்களின் வணிகத்தலங்களும் நிறுவனங்களும் சூறையாடப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்காமல், கொலை, கொள்ளை போன்ற பயங்கரக் குற்றச்செயல்களைத் தடுக்காமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது என்றும் சில காவலர்களும் கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டபோது, காவல்துறையைக் கையில் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி, "காவலர் செல்வராஜ் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காவல்துறையினர் சீருடையில் கறுப்புபட்டை மட்டுமே அணிந்தனர்" எனக் கருத்து வெளியிட்டதும் மத்தியப் படைகள் வந்துதான் கலவரத்தை அடக்க முடிந்தது என்பதும் கருணாநிதியின் இயலாமையைக் காட்டியதோடு முஸ்லிம்களின் வெறுப்பையும் தேடித்தந்தது.
தொடர்ந்து நடந்த கோவைக் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இந்துக்களின் ஆதரவைக் கருணாநிதி இழந்தார்; அதுபோன்றே குற்றத்தில் தொடர்புடையவர்களைத் தேடுவதற்காகக் காவல்துறை தமிழகமெங்கும் செய்த அத்துமீறல்களும் கருணாநிதி பா.ஜ.கவுடன் கூட்டணி உறவு கொண்டதும் முஸ்லிம்களை அவருக்கு எதிராகத் திருப்பின.
த.மா.கா, காங்கிரஸ், பாமக, இரு கம்யூனிஸ்ட்கள், மதசார்பற்ற ஜனதா தளம், இ.தே.லீக், பா.பி மற்றும் பல சிறிய கட்சிகளையும் இணைத்து மகா கூட்டணி அமைத்து ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்ததாலும் ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனுச் செய்திருந்ததாலும் 2001 தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவியால் தமிழக முதல்வராகப் பதவியில் அமர்த்தப்பட்ட ஜெயலலிதா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதவி விலகி, முதன்முதலாகச் சட்டமன்றத்தை மிதித்த பன்னீர்செல்வத்தைத் தமிழக முதல்வராக்கினார். தம் மீதான வழக்கில் இருந்து விடுதலை பெற்றபின் ஆண்டிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரைப் பதவி விலகச் செய்து அவ்விடத்தில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வராக அமர்ந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா தம் இரண்டாம் ஆட்சிக்காலத்தில், அரசு ஊழியர் போராட்டத்தை முரட்டுத்தனமாக அடக்கியதும் மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்ததும் கோயில்களில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைப் பலியிடத் தடை விதித்ததும் பல தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பலையை உருவாக்கியது.
கூடவே கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உருவாக்கிய வலிமையான கூட்டணியும் விஜயகாந்தின் தே.மு.தி.க தனியாகப் போட்டியிட்டதில் தி.மு.க எதிர்ப்பு வாக்குகள் அ.இ அ. தி.மு.கவிற்குச் செல்லாமல் தே.மு.தி.கவிற்குப் போனதும் சேர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சியை அகற்றிக் கருணாநிதியை மீண்டும் தமிழக முதல்வராக்கின.
இப்போது எதிர்வரும் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வர முடியுமா?
கருணாநிதியின் நடப்பு ஆட்சியில் பெரிதாகக் குறைகூறும் அளவுக்கு மக்களுக்குப் பிரச்சனைகள் இல்லை. ஒரு ரூபாய் விலையில் ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி, 108 ஆம்புலன்ஸ் திட்டம், உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எனப்பலவும் ஏழை , நடுத்தர மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. துணை முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளும் ஜெயலலிதாவிற்கு நேர்மாறான அவரின் எளிமையான அணுகுமுறைகளும் மக்களுக்குப் பிடித்துள்ளன.
தலைவி கொடநாட்டிலோ சிறுதாவூரிலோ முடங்கிப்போயுள்ளதைப்போல எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.கவும் முடங்கிக் கிடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காகப் பொதுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ போராடும் வாய்ப்பையும் அக்கட்சி இழந்துள்ளது. ஆட்சியை இழந்தும் நெருக்கடி நிலைக்காலக் கொடுமைகளுக்குள்ளாகியும் கூட, தி.மு.க எனும் கனலை அணையாமல் காத்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கருணாநிதி உழைத்ததில் பத்தில் ஒரு பங்கு செயல்பாட்டைக்கூட ஜெயலலிதா காட்டவில்லை. கோவையிலும் திருச்சியிலும் கூடிய கூட்டத்தைப் பார்த்து ஜெயலலிதா மகிழ்ந்து நம்பிக்கை கொண்டால்..., நீண்ட நாட்களுக்குப் பின் ஜெயலலிதாவைக் காணக் கட்சிக்காரர்களும் பொதுமக்களும் வந்ததை வைத்துத் தமக்குப் பேராதரவு இருப்பதாக நினைத்துவிட்டால் அது அரசியல் சிறுபிள்ளைத்தனமாகும். தி.மு.க ஆட்சியில் பெருந்தலைவர் காமராஜருக்கும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் கருணாநிதிக்கும் இதைவிடப் பெரும் கூட்டம் கூடியிருந்தது என்பதை யாராவது ஜெயலலிதாவுக்கு நினைவூட்டினால் நல்லது.
"நீங்கள் விரும்பும் நல்ல கூட்டணி அமையும்" என ஜெயலலிதா சொன்னதைக் காங்கிரஸுடனான கூட்டணி எனச் சிலர் வியாக்கியானம் செய்கின்றனர். இப்போதுள்ள தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வலுவானதாகும். ராகுல் காந்திக்குத் தி.மு.க வின் பிடியில் இருந்து காங்கிரஸை விடுவிக்கும் எண்ணம் இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டாலும் கட்சித் தலைவி சோனியாவோ பிரதமர் மன்மோகன் சிங்கோ இதுவரை இக்கூட்டணிக்கு எதிராக எதுவும் கூறவில்லை. முதல்வர் கருணாநிதியுடனான டாக்டர் ராமதாஸின் அண்மைய சந்திப்பு, மீண்டும் பா.ம.க வை,தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்து விட்டால் அ.இ.அ.தி.மு.க வரும் தேர்தலில் வெல்வது என்பது கனவாகவே முடியும்.
ஒருவேளை வியாக்கியானிகள் சொன்னதுபோல்க் காங்கிரஸுடன் அ.இ.அ.தி.மு.க கூட்டணி உறவு கொண்டால், கதவருகே காத்து நிற்கும் ராமதாஸும் ஒட்டிக் கொள்ளலாம். ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையைக் காரணம் காட்டிக் கூட்டணியில் இருந்து வை.கோ வெளியேறலாம். காங்கிரஸை எதிர்க்கும் இரு கம்யூனிஸ்ட்களும் வெளியேறலாம். இதை ஈடுகட்ட ஜெயலலிதா விஜயகாந்தையும் தம்மோடு சேர்த்தால் ராமதாஸ் வெளியேறவேண்டி வரும்.
பழைய அனுபவங்களிலிருந்து பாடம் படித்த காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளாது என்று வைத்துக் கொள்வோம். ஜெயலலிதா உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ண சாமியைச் சந்தித்ததுபோல, விஜயகாந்தையும் சந்தித்துத் தம் கூட்டணியோடு சேர்த்துக் கொண்டால்......... இரு கம்யூனிஸ்ட்களையும் தம்மோடு இருக்கும் ம.தி.மு.க வையும் சேர்த்து 2001 ஆம் ஆண்டில் அமைத்த மெகா கூட்டணிபோல ஒன்றை உருவாக்கினால்.... ஒருவேளை தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை மிரள வைக்க முடியும். ஆனால் அ.இ.அ.தி.மு.க வின் பக்கம் போவதற்கு விஜயகாந்தை ஆளும்கட்சியான காங்கிரஸ் அனுமதிக்காது.
தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் முயன்று விஜயகாந்தையும் ராமதாஸையும் சேர்த்துக் கொண்டு புதிய கூட்டணி கண்டால்கூட, அது கனவு காணும் காமராஜர் ஆட்சியைத் தமிழகத்தில் அமைக்க முடியாது.
காங்கிரஸ் தனி அணி காணும் பட்சத்தில் மும்முனைப் போட்டி வந்து யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கும் நிலை வந்தால், கடந்தகால அனுபவங்களை வைத்து காங்கிரஸ் அ.இ.அ.தி.மு.க அணியோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதை விட, தி.மு.க அணியோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியும். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்ற அக்கட்சியின் ஆசையும் நிறைவேறலாம்.
உடனடியாக மக்களின் மனதைப் பாதிக்கும், "சாவுக்கொரு ஓட்டு; நோவுக்கொரு ஓட்டு" போன்ற எந்த அனுதாப அலைகளும் வீசாமல் இருந்தால், இப்போதுள்ள கூட்டணி பலத்தில் வரும் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிப்பது என்பது கேள்விக்குறியே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக